இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு - கி.வீரமணி அறிவிப்பு
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த முடிவைத் திராவிடர் கழகம் எடுத்ததோ, அந்த முடிவை மாற்றிக் கொள்ளவேண்டிய அளவுக்குப் பெரிய மாற்றம் ஏதும் தமிழ்நாட்டு ஆட்சியில் நடந்துவிடவில்லை.

இந்த சூழ்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிடர் கழகம் திமுகவுக்கும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கும் தன் ஆதரவைத் தெரிவித்திருந்தது. இடைத்தேர்தல் நடக்க இருக்கும் மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களையே திராவிடர் கழகம் ஆதரிக்கும்.
தி.மு.க.வைப் பொருத்தவரையில் எதிர்க்கட்சி என்ற நிலையில், காவிரி நதி நீர் உரிமை பிரச்சனை உள்பட தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சனைகள் அனைத்திலும் தனது கடமையினை சிறப்பாக ஆற்றிவரும் நிலையில், மூன்று தொகுதிகளிலும் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.க.வையே ஆதரிப்பது என்று முடிவு செய்வது ஜனநாயகம் காப்பதற்கே ஆகும். எனவே, தமிழக வாக்காளர்களும் தி.மு.க.வை வெற்றியடையச் செய்ய வேண்டுமாய்க் கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications