ஒரு விசில் சப்தத்திற்கே பயந்த திமுக! இன்னொரு ஆர்.எஸ்.பாரதியான ஆ.ராசா! பாஜக சாடல்
சென்னை: ஒரு விசில் சப்தத்திற்கே ஆடிப்போன திராவிட மாடல் என திமுகவை, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். விசிக, ஐயூஎம்எல்லை விமர்சிப்பதாக கூறி, பெண்களை ஆ.ராசா விமர்சித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஏணியும் சிறுத்தையும்
விசில் சத்தத்தில் கரைந்து போனதற்கு
காழ்ப்புணர்வோடு காம லீலை வசனங்களை கருத்தாக எழுதி
எக்ஸ் தளத்தில் புலம்பிய
இருக்கிறார்
பெரியாரின் பேரன் பூர்ஷ்வா
ஆ ராசா
சித்தாந்தமாம்
அதுவும் பெரியாரின் செத்தாந்தமாம்
அது விசில் சத்தத்திற்கு
முட்டுக் கொடுக்கலாமா?
விசில் சத்தத்திற்கே பயந்தது
பலமா பலவீனமா
அது கூட தாங்காமல் கரைந்தது
ஒரு சித்தாந்தமா ?
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இல்லாத பிராமணர்களின் ஆதிக்கமாம்
அவர்கள் ஒழிய வேண்டுமாம்
பிராமணர்கள் ஒழிக
தமிழன் ஒழிக
தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி
சொன்னவரின் தாய்மொழி தெலுங்கு
தினசரி மாற்றிப் பேசுவதில்
மாற்றில்லாதவர்
திமுகவையும் அண்ணாவையும் அவர் தூற்றிய தூற்று
இன்னும்
காற்றில் இருந்து கரையவில்லை
மாற்றி மாற்றி பேசும் மன நோயாளியின் வழித் தோன்றல்கள்
அவரின் சித்தாந்தத்தை காப்பாற்ற
கால தேச வர்த்தமானத்துக்கு காத்திருக்கிறார்களாம்
65 ஆண்டு காலங்கள்
ஆண்டு
அழித்து
தமிழனை புதை குழியில் தள்ளியது போதாதாம்
அத்தனை காலம் இந்த சித்தாந்தத்தை காப்பாற்ற போதவில்லையாம்
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப் போன #திராவிடமாடல்
ஒப்பாரிகளின் ஒய்யார கூடாரம்
அழுகுரல்களின் ஆனந்த தாண்டவம்
பயந்தாங்கொள்ளிகளின் விரிசல் மாளிகை
திமுக என்னும் தீய்ந்து போன திருக்குவளை
தீய சக்தி
பாவம் ஆ ராசா புலம்பலில் இன்னொரு
ஆர் எஸ் பாரதி ஆகிவிட்டார்
இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தவெக அமைச்சரவையில் விசிகவும், ஐயூஎம்எல்லும் இணைந்தது குறித்து திமுக எம்பி ஆ.ராசா ஆபாசமாக பதிவிட்டிருந்தார். தனது ட்விட்டர் பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
முன் "ஏற" தரப்பட்ட ஏணியும், மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும் வெறும் விசில் சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்... என்று கூறி அதன் பிறகு பெண்களை அவமதிக்கும் வகையில் இரு வரிகளை ராசா கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு விசிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. ஆ.ராசாவின் பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார், கனிமொழி இதுவரை கண்டிக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர்.
ஆ.ராசாவின் பதிவுக்கு விசிக முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கூறியிருப்பதாவது:
அதிகாரம் எளியவர்க்கு
அதிலென்ன ஆத்திரம்
ஆற்றாமையால் அள்ளிவீசும்
அவதூறுகள் அசைத்திடாது
அமைதியாய் கடப்பது
அநாகரீகம் தவிர்க்கவே.
அநீதி தொடர்ந்து
அனைத்தும் உரைத்தால்
அணைக்க முடியா
அனலில் தகித்து போவீர்! என கடுமையாக எச்சரித்திருந்தார்.
அது போல் ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது தவெக கூட்டணியில் இணைந்தது ஏன் என்பது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:திமுக கூட்டணிக்கு நாங்கள் உறுதியுடன் இருந்ததை போகிற போக்கில் விமர்சிக்கக்கூடாது. காங்கிரஸ் எடுத்த முடிவை தடுக்க எனக்கு வலிமையில்லை; கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்த வலிமையில்லை; ஐயூஎம்எல் கட்சியில் நிலைப்பாட்டுக்குள் என்னால் தலையீடு செய்யமுடியாது.
தவெக அமைச்சசரவையில் இணைந்த இந்த முடிவை மேற்கொள்வதற்கு தன்னலமோ, பதவி ஆசையோ முதன்மையாவை அல்ல; தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி தான் காரணம் என்பதை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கு அறிவார் என அவர் தெரிவித்துள்ளார்.
-
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications