ஆளுக்கு 2000, 3000 தர பிளான் பண்றாங்க.. சொல்கிறார் ராமதாஸ்
காஞ்சிபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ. 2000,3000 என்று தர திட்டமிட்டுள்ளன திராவிடக் கட்சிகள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடந்த பாமக இளைஞர் அணி மாநாட்டில் பேசுகையில் இந்தக் குற்றச்சாட்டை அவர் வைத்தார்.
ராமதாஸ் பேசுகையில்,
வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகள் ஒரு ஓட்டுக்கு ரூ.2,000, ரூ.3,000 என விலை நிர்ணயம் செய்துள்ளனர். ஓட்டை யாருக்கும் விற்பதில்லை என்று ஒவ்வொரு இளைஞரும் தினமும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவர்களை விரட்டி அடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 134 வன்னியர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எங்கும் இது போன்று ஒரே சமுதாயத்தினர் மீது நடவடிக்கை எடுத்ததாக வரலாறு இல்லை.
பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வருவோம். அதுதான் முதல் ஆணையாக இருக்கும். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்காது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமகவைச் சேர்ந்த 15 பேரை எம்.பி.யாக தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications