தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகள் தலையில் ரூ.58 ஆயிரம் கடன்! திராவிட கட்சிகள் மீது எச்.ராஜா பாய்ச்சல்
திண்டுக்கல்: 1967ல் இருந்து ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டன என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
திண்டுக்கல்லில் நடந்த கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக-அ.தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி நிலவுகிறது.

மற்ற கட்சியினர் காரில் கட்சி கொடி கட்டி வந்தால், எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சி கொடியுடன் ஆளுங்கட்சியினரின் 3 ஆயிரம் கார்கள் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு ‘பூத்'க்கும் வெளியூர் அ.தி.மு.க.வினர் சுமார் 100 பேர் முகாமிட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் 100 சதவீதம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது.
1967ல் இருந்து தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டன. தற்போது, தமிழக அரசுக்கு ரூ.4 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் தலா ரூ.58 ஆயிரம் கடன் உள்ளது. இந்த பின்னடைவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற, முன்னேற்ற பாதையில் செல்ல பாஜகவால் மட்டுமே முடியும்.
பாஜகவின் அடிப்படை கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகள் மட்டும் எங்களுடன் கூட்டணி வைத்தால் போதும். மற்றவர்கள் எங்களுக்கு தேவையில்லை. மாநில கட்சிகள் பாஜகவை கண்டு அச்சம் அடைந்துள்ளன. இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளை நாடு திரும்ப வைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தை தமிழக முதல்வர் புறக்கணித்துவிட்டார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க மத்திய அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி மதசார்பின்மை என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தி வருகிறது. பாஜக எப்போதுமே கட்டாய மதமாற்றத்தை ஆதரிக்காது.இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications