ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக் காதலி... ஆத்திரத்தில் உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற டிரைவர் கைது!
திருவண்ணாமலை: ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற வேன் டிரைவரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே தண்டராம்பட்டு அருகே உள்ள சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிகாமணி என்பவருக்கு தனம், பரமேஸ்வரி என இரண்டு மனைவிகள்.

இரண்டாவது மனைவி பரமேஸ்வரிக்கு சுகுணா (15), அபினயா (11) என இரண்டு மகள்களும், சதீஷ் (8) என்கிற மகனும் உள்ளனர். சிகாமணி தனது முதல் மனைவி தனத்துடன் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
பரமேஸ்வரி தனது 3 குழந்தைகளுடன் சேரந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மினி வேன் டிரைவர் பரந்தாமன் (42) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த பரந்தாமன் பரமேஸ்வரியின் வீட்டுக்கு சென்று, அவரை தனது ஆசைக்கு இணங்கும்படி அழைத்துள்ளார். ஆனால், குழந்தைகள் இருப்பதால் பரந்தாமனின் ஆசைக்கு இணங்க மறுத்துள்ளார் பரமேஸ்வரி.
இதனால் ஆத்திரம் அடைந்த பரந்தாமன் அங்கிருந்த மண்எண்ணெய் எடுத்து பரமேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் பரமேஸ்வரியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது அருகில் இருந்த பரமேஸ்வரியின் மகள் அபினயா மீதும் தீ பிடித்துள்ளது.
இருவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார், அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பரமேஸ்வரி சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பரந்தாமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications