மெரினாவில் குட்டி விமானத்தைப் பறக்கவிட்ட சீன வாலிபர் விசாரணைக்குப்பின் விடுவிப்பு
சென்னை: சென்னை மெரினாவில் குட்டி விமானத்தை பறக்க விட்ட சீன வாலிபர் பிடிபட்டதுடன் குட்டி விமானமும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள 10 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குட்டி விமானம் விழுந்தது. கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குட்டி விமானத்தை பறக்க விட்ட மைலாப்பூரைச் சேர்ந்த கிறிஸ்தவ பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் போலீஸ் அனுமதி இல்லாமல் ஆள் இல்லாத கேமரா விமானங்களை பறக்க விட தடை விதிக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவித்தார்.
கமிஷனர் ஜார்ஜின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் யார், யார் இதுபோன்ற விமானங்களை வைத்துள்ளனர் என்று போலீசார் கணக்கெடுத்தார்கள்.
நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட நிறைய பேர், இந்த குட்டி விமானங்களை போலீஸ் அனுமதி பெற்று வைத்துள்ளனர். போலீஸ் அனுமதி இல்லாமல் கேமரா விமானம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே, வெளிநாட்டு வாலிபர் ஒருவர் குட்டி விமானத்தை வானத்தில் பறக்க விட்டு, மெரினா கடற்கரையை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
இந்த தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனையடுத்து போலீசார் குட்டி கேமரா விமானத்தை பறக்கவிட்ட சீன வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
ரிமோட் மூலம் வானத்தில் பறந்த கேமரா விமானம் கீழே இறக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பேட்டரியில் இயங்கக்கூடிய அந்த விமானம் சீனாவில் இருந்து வாங்கி வரப்பட்டது ஆகும்.
அந்த விமானத்தை பறக்க விட்ட சீன வாலிபரின் பெயர் சுகியாங். பட்டதாரியான இவர் கடந்த ஒரு மாதமாக சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள எலக்ட்ரானிக் கம்பெனியில் வர்த்தக மேலாளராக வேலை பார்த்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார்.
அவர் பாஸ்போர்ட்டு, விசா போன்ற ஆவணங்களை சரியாக வைத்துள்ளார். ஆள் இல்லாத குட்டி கேமரா விமானங்களை போலீஸ் அனுமதி இல்லாமல் பறக்க விடக் கூடாது என்ற விஷயம் தனக்கு தெரியாது என்று அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
அவர் குட்டி விமானத்தில் உள்ள கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு சீன வாலிபர் சுகியாங் விடுவிக்கப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications