ஆண்களே தயவு செய்து இந்த குப்புசாமி காம்பவுண்ட் அசோக் போல வாழாதீர்கள்....!
திருப்பூர்: குடிப்பழக்கத்தைக் கண்டித்த தனது மனைவியை கட்டிய நான்கே மாதத்தில் கொலை செய்துள்ளார் ஒரு வெறித்தனமான குடிகாரர்.
அந்த நபரின் பெயர் அசோக். 28 வயதாகிறது. திருப்பூர், சுண்டமேடு, குப்புசாமி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கும் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற 25 வயதுப் பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. கணவருடன் சந்தோஷமாக குடித்தனத்தை ஆரம்பித்தார் கவிதா.
இருவரும் திருப்பூரில் வந்து குடியேறினர். பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தனர். அசோக்குக்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினசரி குடித்து விட்டுத்தான் வீட்டுக்கே வருவார். கவிதா இதைத் தட்டிக் கேட்டார். குடிப்பழக்கத்தை விடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அசோக் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து குடித்தார். இதனால் வீட்டில் தினசரி சண்டைதான்.
நேற்று முன்தினம் இரவும் அசோக் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த கவிதா, எத்தனை முறை சொல்லியும் குடியை விட மறுக்கிறீர்களே என்று சண்டை பிடி்தாதர். இதனால் கோபமடைந்தார் அசோக். மேலும் மனைவி சத்தம் போட்டு பேசியதால் அக்கம் பக்கத்தினர் கேட்டால் தனது மானம் போய் விடுமே என்று நினைத்து வீட்டிலிருந்த ரேடியோ சத்தத்தை அதிகமாக வைத்தார். கதவையும் பூட்டினார்.
பின்னர் இருவருக்கும் சண்டை முற்றியுள்ளது. ஏற்கனவே குடி போதையில் இருந்த அசோக், போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், வீடடில் இருந்த அரிவாள் மனையை எடுத்து மனைவி கழுத்தை அறுத்து விட்டார். இதில் கவிதா ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
மனைவி இறந்ததைப் பார்த்த அசோக் இரவில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இன்று காலையில்தான் கவிதா பிணமாகக் கிடந்தத அக்கம் பக்கத்தினருக்குத் தெரிய வந்தது. போலீஸார் விரைந்து வந்து கவிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
தலைமறைவாகி விட்ட அசோக்கைப் போலீஸார் தேடி வருகின்றனர். ஒரு குடிப்பழக்கம் எவ்வளவு அழகான வாழ்க்கையை கெடுத்து விட்டது பாருங்கள்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications