நடிகை தன்ஷிகாவிடம் போதையில் ரகளை செய்த இளைஞர்கள் கைது!
நடிகை தன்ஷிகாவிடம் போதையில் தகராறு செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
அரவான், பரதேசி போன்ற படங்களில் நடித்த தன்ஷிகா, இப்போது காத்தாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
காத்தாடி படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள வேகமன் பகுதியில் நடக்கிறது. பாடல் காட்சியொன்றை அங்கு படமாக்குகின்றனர். இதில் தன்ஷிகா கலந்து கொள்ளப் போயிருந்தார்.

படப்பிடிப்புக்கான ஆயத்த பணிகளை படக்குழுவினர் செய்தனர். லைட்கள் பொருத்தப்பட்டது. தன்ஷிகா கேரவனில் உட்கார்ந்து இருந்தார். அப்போது சில வாலிபர்கள் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு கும்பலாக வந்தனர். எல்லோரும் குடித்து இருந்தார்கள்.
கேரவனில் இருந்த தன்ஷிகாவைப் பார்க்க வேண்டும் என்றனர். அவரும் வெளியே வந்தார். உடனே தன்ஷிகாவுடன் சேர்ந்த நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேனேஜர் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் போதையில் இருந்தவர்கள் தகராறு செய்தனர். தன்ஷிகா கையை பிடித்து இழுக்க முயன்றார்கள். மேனேஜரையும் அடித்துள்ளனர். படப்பிடிப்பு குழுவினர் அங்கு ஓடோடி வந்தனர். போதையில் ரகளை செய்தவர்களை பிடித்து வைத்தனர்.
உடனே, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்ததும் போதை ஆசாமிகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications