நாமக்கல் அருகே குடிபோதையில் லாரி ஓட்டிய ஓட்டுநர்... தடுப்பு சுவரில் மோதி விபத்து..பரபர வீடியோ
குடிபோதையில் லாரியை ஓட்டியதால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்:மதுரை-கோவை நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே குடித்துவிட்டு லாரியை போதையில் ஓட்டியதால் அது சாலையில் அச்சுறுத்தும் வகையில் இங்கும் அங்கும் சென்று இறுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி காண்பவரை அதிர்ச்சியடைய வைத்தது.
Recommended Video

கோவையிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், லாரி ஒன்று நிறைய சுமையை ஏற்றிக்கொண்டு சென்றது. அதன் ஓட்டுநர் குடித்துவிட்டு லாரியை இங்கும் அங்குமாக அலைக்கழித்து சென்று இறுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை திடுக்கிட வைக்கிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் சாலை விபத்துகள் நடக்கின்றன. சாலை விபத்துகளில் தமிழகம் இரண்டவது இடத்தைப் பிடிக்கிறது. மேலும் குடிபோதையில் வண்டிகளை இயக்குவதுதான் விபத்து ஏற்பட முதல் காரணம் என்பதால் உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications