”புல்” மப்பில் பெண் போலீஸின் மடியில் உட்கார்ந்த குடிகாரன் - செம அடி!
சென்னை: சென்னை எண்ணூரில் பேருந்தில் பயணம் செய்த பெண் போலீஸ் ஒருவரின் மடியில் போதை ஆசாமி ஒருவர் "தொபுக்கடீர்" என்று உட்கார்ந்த சம்பவம் கலகலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புல் மப்பில் தான் என்ன செய்கின்றோம் என்பதே தெரியாமல், சீட் என்று நினைத்து அந்த பெண் போலீஸ்காரரின் மடியில் அமர்ந்துள்ளார் அந்தக் "குடி" மகன்.
அதற்கப்புறம் அவருக்கு "மாமியார்" வீட்டில் தனி கவனிப்புகள் நடைபெற்றிருக்கும் என்பது உங்களுகெல்லாம் தெரிந்த விஷயம்தான்.
கண்காணிப்பில் பெண் போலீஸ்:
எண்ணூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் நேற்று மாலை எண்ணூர் அத்திப்பட்டு புதுப்பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டார்.
பஸ்ஸில் ஏறி அமர்ந்தவர்:
பின்னர் அங்கிருந்து பாரிமுனை செல்லும் மாநகர பஸ்சில் போலீஸ் நிலையம் செல்வதற்காக ஏறி இருக்கையில் அமர்ந்தார்.
நாங்களாம் எப்பவுமே "ஸ்டெடி":
காட்டுக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்ற போது போதை ஆசாமி ஒருவர் தள்ளாடியபடியே பஸ்சில் ஏறினார். ஆண்கள் அமரும் பகுதியில் இருக்கைகள் காலியாக இருந்தும் ஒரு படத்தில் வடிவேலு கம்பியைக் கூடப் பிடிக்காமல் நின்றபடியே வருவதைப் போல டான்ஸ் ஆடியபடி பயணம் செய்தார்.
கொஞ்சம் மடில உட்கார்ந்துக்கறேன்:
இந்த நிலையில் பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் போலீஸ்காரர் அமர்ந்து இருந்த இருக்கையின் அருகே உளறியபடி சென்ற அவர் திடீரென பெண் போலீசின் மடியில் அமர்ந்தார்.
போதை ஆசாமிக்கு தர்ம அடி:
அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டார். உடனே மற்ற பயணிகள் போதை ஆசாமியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாவம் போலீஸே கன்ப்யூஸ் ஆய்டுச்சு:
அவரை எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். முழு போதையில் இருந்த அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசி போலீசாரை கிறங்கடித்தார்.
தெளியத்தெளிய விசாரணை:
சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போதை இறங்கிய பின்னரே அவரிடம் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அவர் எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்த முரளி என்பது தெரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
முரளிக்கு காவல் நிலையத்தில் என்ன மாதிரியான "கவனிப்பு" கிடைத்தது என்ற விவரம் தெரியவில்லை!












Click it and Unblock the Notifications