குற்றாலத்தில் கலகலத்த சாரல் திருவிழா... நீச்சலடித்து 3வது இடத்தை வென்ற ஏஎஸ்பி அரவிந்தன்
குற்றாலம்: குற்றாலத்தில் ஆண்டுத்தோறும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சாரல் திருவிழா நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று காலை சுற்றுலாப் பயணிகளுக்காக நீச்சல் போட்டி குற்றாலம் பேருராட்சி நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர். 24 பேர் வெற்றி பெற்றனர்.
14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கவுசிக் முதலிடத்தையும், சுஜித் கிருஷ்ணா இரண்டாமிடத்தையும், ஆலண்ட் ராய் 3வது இடத்தையும் பெற்றனர்.
17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நிக்லேசே முதலிடத்தையும், ஹரி பிரசாத் 2 வது இடத்தையும், நிக்சன் 3வது இடத்தையும் பெற்றனர்.

பொதுப் பிரிவில் சேது மாணிக்கவேல் முதல் இடத்தையும், எமில் 2வது இடத்தையும், தென்காசி காவல் துறை துணை கண்காணிப்பாளர் அரவிந்தன் 3வது இடத்தையும் பெற்றனர்.
தோட்டக்கலைதுறை கண்காட்சி:
தோட்டக்கலை துறை சார்பில் குற்றாலம் ஐந்தருவியில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சுற்றுசூழல் பூங்காவில் தோட்டகலைத்துறை சார்பில் இன்று சாரல் திருவிழா 2வது நாளை முன்னிட்டு கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியினை தென்காசி மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தை வேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறும். இந்த கண்காட்சியில் பல்வேறு பழங்களின் அணிவகுப்பு ஏராளமாக இடம்பெற்றுள்ளன. மேலும் அரியவகை மலர்களின் அணிவகுப்போடு கண்காட்சியும் இடம்பெற்றுள்ளன. குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு இங்கு திரண்டுவந்து இயற்கையை ரசித்து சென்ற வண்ணம் உள்ளனர்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications