மகளுக்கு நீதி கிடைக்கும்வரை விடப்போவதில்லை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தை திட்டவட்டம்
விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கில் அவரது தந்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Recommended Video

கோவை: திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிவித்துள்ள நிலையில், தன் மகள் மரணத்தில் நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என அவரது தந்தை ரவி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 2015 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாமக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை சி பி சி ஐ டி விசாரித்து வந்த நிலையில் அதனை சிபிஐ க்கு மாற்றம் செய்ய கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில் வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை முடித்து கொண்ட சிபிஐ கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில் விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே என்றும் கொலைக்கான முகாந்திரம் இல்லாததால் விசாரணையை முடித்து கொள்வதாகவும் கூறியிருந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சிபிஐ அறிக்கையின் முகாந்திரத்தை சுட்டிக்காட்டி விஷ்ணு பிரியாவின் தந்தை ரவிக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதில் சிபிஐ அறிக்கையில் ஏதேனும் கருத்துக்கள் கூற விரும்பினால் 9 ம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி விஷ்ணு பிரியாவின் தந்தை இன்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வந்தார். சம்மன் அனுப்பியதால் இன்று தான் ஆஜராக வந்ததாகவும், வழக்கை முடித்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். பின்னர் நீதிபதி மலர்கண்ணன் வரும் 24 தேதிக்கு இவ்வழக்கை ஒத்தி வைத்தார. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணுபிரியா தந்தை ரவி, தன் மகள் மரணத்தில் நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications