திகிலில் உறைந்துள்ள தி. நகர்... போக்குவரத்து நிறுத்தம் மின்சாரம் துண்டிப்பு
சென்னை சில்க்ஸ் தீவிபத்தால் தி.நகரில் உஸ்மான் சாலையில் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தி.நகரில் ஏற்பட்ட பதற்றம் தணியவில்லை.
சென்னை: பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை கடைகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்து சென்னை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து பல மணி நேரமாகியும் அணைக்கப்படவில்லை என்பதால் தி.நகர் வாசிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், தீவிபத்தால் உஸ்மான் சாலையில் புகை மூட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது.

மேலும் தி.நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஏரளாமான கடைகள் மூடப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட பெரிய கடைகள் உஸ்மான் சாலையில் மூடப்பட்டுள்ளன. மேலும் நல்லி சில்க்ஸ் உள்ளிட்ட பெரிய கடைகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் கடையின் இரண்டாவது மாடியில் சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டடத்தின் உள்ளே தீ பயங்கரமாக எரிவதால், கட்டடத்தின் உட்புற சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
வெளிப்புறச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடம் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் புகை மூட்டம் சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications