ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு.. அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை
தருமபுரி: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான சாம்ராஜ் நகர், மாண்டியா, கொள்ளே கால், அஞ்சிப்பாறை, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

வழக்கமாக 25 ஆயிரம் கனஅடி அளவிற்கு தண்ணீர் வரும் போது மட்டுமே தடை விதிக்கப்படும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் தற்போதே தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்ற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணையில் விநாடிக்கு 5,386 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 13,956 கன அடியாக அதிகரித்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கால்வாய் பாசன பகுதிகளில் மழை குறைந்ததால் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர் திறப்பை விட, வரத்து அதிகளவில் உள்ளதால், நீர்மட்டம் தொடரந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 63.54 அடியாக இருந்த நீர் மட்டம், நேற்று 64.91 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் 1.40 அடி அளவிற்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications