குமரியில் மரங்களை வேரோடு பிடுங்கிப் போடும் சூறைக்காற்று... மரம் விழுந்ததில் 4 பேர் பலி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் மரம் சாய்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

கன்னியாகுமரி: ஓகி புயல் காரணமாக வீசும் பலத்த காற்றால் குமரி மாவட்டத்தில் மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன. மரம் சாய்ந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரிக்கு அருகே உருவாகியுள்ள ஓகி புயல் காரணமாக நேற்று இரவு முதல் அங்கு கனமழையுடன், சூறைக்காற்றும் வீசி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணிக்கு 85 கிலோ மீட்டரில் வீசத் தொடங்கிய புயல் காற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் சாலையோரங்களில் இருந்த பெரிய பெரிய மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன. மரங்கள் சாய்வதால் அவற்றோடு மின்கம்பங்களும் சாய்ந்து விழுவதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது.
நாகர்கோவிலில் மரம் சாய்ந்ததில் மரத்தடியில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போன்று குழித்துறை அருகே மலையடி பகுதியில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஓகி புயலுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications