இடைத்தேர்தல் ரத்து தமிழகத்திற்கு தலைகுனிவு- எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் - துரைமுருகன்
இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பு தமிழகத்திற்கு தலைகுனிவு, மானமுள்ள அரசு என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு அதனால் தேசிய அளவில் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவிற்கு ஆளுங்கட்சியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். மானமுள்ள அரசு என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நூதன முறையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம், பரிசு பட்டுவாடா
செல்போன்கள், குத்து விளக்குகளை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இவை இல்லாமல் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வது, பால், மளிகை பொருட்களை அரசியல் கட்சிகள் தங்களின் கணக்கில் வாங்கித்தருவது என பெரிய அளவில் பணம் புழங்கியுள்ளது. இடைத்தேர்தலை கண்காணிக்க பலர் இருந்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது.

தேர்தல் ரத்து
பணம் மற்றும் பரிசுப்பொருள் தருவதை எவ்வளவு தடுத்தாலும், நூதன முறையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் பணம் மற்றும் பரிசுகளை பட்டுவாடா செய்ததாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நேர்மையான சூழல் மாறும் வரை தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தலைகுனிவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக மூத்த தலைவரும், கட்சியின் முதன்மை செயலாளருமான துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு அதனால் தேசிய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

ராஜினாமா செய்க
இந்த தலைகுனிவுக்கு ஆளுங்கட்சியே காரணம் என குற்றம்சாட்டியுள்ள துரைமுருகன், மானமுள்ள அரசு என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது மிகப்பெரிய களங்கம். நியாயமாக அமைச்சர்கள் ராஜினாமா செய்யவேண்டும், இது தன்னுடைய சொந்த கருத்து என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.

பணப்பட்டுவாடா
அரசாங்கமே பணப்பட்டுவாடா செய்துள்ளது தெரியவந்துள்ளது. இனிமேல் பணநடமாட்டம் இல்லாமல் எப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும். அதுதான் நாட்டிற்கு நல்லது என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications