தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரும்.. துரைமுருகன் திடீர் பேச்சு
தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாறுதல் வரும் என்று திமுக முன்னாள அமைச்சர் துரரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை: தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் தி.மு.க. சார்பில் மறைந்த பழக்கடை கி.ஜெயராமன் 33-வது நினைவு நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட துரைமுருகன் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக போட்டா போட்டி அரசியல்தான் நடைபெறுகிறது. எம்.எல். ஏ.க்களை கடத்தி ஆடு, மாடு போல ரிசார்டுகளில் அடைத்து வைத்தல், பண பட்டுவாடா செய்தல் தான் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் எதுவும் நடைபெறவில்லை.
தமிழகத்தில் விரைவில் பெரிய மாறுதல் வரப்போகிறது. தேர்தல் வரும். அடுத்த 25 ஆண்டுக கால தமிழக அரசியல் மு.க.ஸ்டாலின் கையில் இருக்கும்.
கருணாநிதியைப் போல ஆளுமை திறன்மிக்கவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவருக்கு நிகர் யாரும் இல்லை. இந்த முறை நாம் ஆட்சிக்கு வந்தால் இன்னும் 25 ஆண்டு காலம் கட்சியிலும் ஆட்சியிலும் அமரும் சூழ்நிலை உருவாகும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications