மேடையில் துரைமுருகன் அழ, அவரைப் பார்த்து திமுகவினர் அழ: அழுகாட்சியாகிப் போன கூட்டம்
வேலூர்: காட்பாடியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மேடையில் அழ அவரைப் பார்த்து கட்சியினர் அழ என அந்த இடமே கண்ணீர்மயமாகிவிட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,

பதவிக்காக இல்லை
நான் எம்.எல்.ஏ. பதவிக்காக தேர்தலில் போட்டியிடவில்லை. நான் எம்.எல்.ஏ., அமைச்சர், எதிர்கட்சி உறுப்பினர் என அனைத்து பதவிகளிலும் சட்டசபையில் இருந்துள்ளேன். முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவிகளை மட்டும் தான் நான் இன்னும் வகிக்கவில்லை.

கோஷ்டிகள்
எனக்கு கோஷ்டிகள் எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் இங்கு 2 பேர் அடித்துக் கொண்டனர். என்னை திட்டினார்கள். அதை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நம்மை படைத்த கடவுளையே திட்டுகிறோம்.

வேட்பாளர் தேர்வு
திமுக வேட்பாளர்களை தேர்வு செய்து கருணாநிதி மற்றும் ஸ்டாலின். நான் அவர்கள் அருகே நின்று கொண்டு ஒத்து ஊதுபவன். அவ்வளவு தான். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்னை திட்டி என் கொடும்பாவியை எரித்தார்கள்.

கொளுத்துங்கள்
என் கொடும்பாவி எரிக்கப்பட்டது குறித்து அறிந்த கருணாநிதி உனக்கு திருஷ்டி கழிந்துவிட்டது என்று என்னிடம் தெரிவித்தார். கொடும்பாவியை ஏன் கொளுத்துகிறீர்கள்? என்னையே கொளுத்துங்கள். நான் கவலைப்பட மாட்டேன்.

கவலை இல்லை
அன்று என்னை ஒழிக என்று கூறியவர்கள் எல்லாம் இன்று வாழ்க என வாழ்த்துகிறார்கள். எனக்காக போஸ்டர் ஒட்டும் கட்சிக்காரன் என்னை திட்டக் கூடாதா? அதற்காக கவலைப்படவில்லை.

கண்ணீர்
அனைவருக்கும் வரும் முடிவு எனக்கும் ஒரு நாள் வரும். என்னை தூக்கிக் கொண்டு செல்கையில் நீங்கள் நான் செய்ததை நினைத்து கண்ணீர்வடிப்பது போதும் எனக்கு என்று கூறி துரைமுருகன் விம்மி அழுதார். அவர் அழுததை பார்த்த திமுகவினர் அழுதனர். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அழுகையுடன் கிளம்பிச் சென்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications