தமிழிசை இன்னும் குழந்தையாவே இருக்கிறார்.. போகிறப்போக்கில் போட்டுத்தாக்கிய துரைமுருகன்!
தமிழிசை வளர வேண்டும், அவர் இன்னும் குழந்தையாவே இருக்கிறார் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழிசை வளர வேண்டும், அவர் இன்னும் குழந்தையாவே இருக்கிறார் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னை கந்தன்சாவடியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த 16-ம் தேதி சைதாப்பேட்டையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தலைவர் தமிழிசையிடம், பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

எலிசபெத் ராணியா?
அதற்கு துரைமுருகன் அளித்த பதிலாவது, இதென்ன ஆச்சர்யம்னு தெரியல. உலகத்தில் பெரிய எலிசபெத் ராணியா தமிழிசை? யாரும் எதையும் கேட்கக்கூடாது என்று சொல்வதற்கு. இது ஜனநாயக நாடு. யாரும் எதையும் கேட்டுக்கொண்டுதான் இருப்பான்.

பதில் சொல்ல வேண்டும்
சீட்டு வந்துகொண்டே இருக்கும். பதில் சொல்ல வேண்டும். எல்லாம் பொதுவுடைமை என்று சொல்கிறாயே எனப் பெரியாரை ஆத்திரமூட்டும் விதத்தில் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்குத் தக்க பதில் கூறினார் பெரியார்.

அடிப்பது தவறு
ஆகையால் ஒருவர் கேள்வி கேட்பதே தவறு, அதற்குப் பயந்துகொண்டு அவரை அடிப்பது, அவர் மீது வழக்குபோடுவது, சிறைக்குள் தள்ளுவது என்ன நடைமுறை என்று தெரியவில்லை.

குழந்தையாவே இருக்கனும்
தமிழிசை அரசியலில் இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். சின்னக் குழந்தையிலிருந்து எனக்கு தமிழிசையைத் தெரியும். இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்''. இவ்வாறு துரைமுருகன் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை கலாய்த்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications