அதிகாலையிலேயே வந்த லஞ்ச ஒழிப்பு துறை.. அதிமுக Ex MLA பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும் இந்நாள் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது வரிசையாக இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள். இதுவரை ஏற்கனவே பல அதிமுக தலைவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், இப்போது பிரபு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்காக அதிகாலை நேரத்தில் பிரபு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ பிரபு மட்டுமின்றி அவரது தந்தை அய்யப்பா வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு சொந்தமான 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், முன்னாள் எம்எல்ஏ பிரபு மீது ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ தந்தை அய்யப்பா தியாதுருகம் ஒன்றிய செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாலையிலேயே அய்யப்பா வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம் கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபு வீடு திறக்கப்படாத நிலையில், அதிகாரிகள் வெளியே காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications