ஜாதிய கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் கோரி சென்னையில் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், ஜாதிய கொலைகளைத் தடுக்கும் வகையிலும் தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், ஜாதிய அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

DYFI protests against Udumalapettai murder

உடுமலைப்பேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கரை ஆணவக்கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும், ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும், சாதி வன்மம் கொண்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதனன்று (மார்ச் 16) வேளச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DYFI protests against Udumalapettai murder

இப்போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ், துணைச்செயலாளர் அனீபா உள்ளிட்டோர் பேசினர்

DYFI protests against Udumalapettai murder

முன்னதாக இப்போராட்டத்திற்கு போலீஸாார் அனுமதி தரவில்லை. அதையும் போராட்டம் நடத்தப்பட்டதால் 30க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் உடுமலைப்பேட்டை தலித் இளைஞர் படுகொலையைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+