எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர்
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் இன்று மாலை 4 மணிக்கு முதல்வராக பதவியேற்பார் என்று அவரது ஆதரவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களினால் சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் அவர் இன்று மாலை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவில் நடைபெற்று வரும் குழப்பங்கள்,சசிகலா சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதிலிருந்து விறுவிறுப்படைந்துள்ளது.

ஆட்சி அமைக்க போவது யார் என்பதில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் எனப்படும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் இருதரப்பும் பல்வேறு முறை ஆளுநரை சந்தித்து,ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.
கூவத்தூரில் 9 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எல்எல்ஏக்கள் எதிர்ப்பார்த்து அவர்கள் காத்திருந்த நிலையில், சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி மூன்றாவது முறையாக இன்றும் காலை ஆளுநரை சந்திக்க சென்றார்
இன்று ஆளுநர் ஆட்சி அமைக்க கூறிவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏக்கள் ஆலோசனை கூவத்தூரில் நடைபெற்றது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் இன்று மாலை 4 மணிக்கு முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பார் என்று ஆளுநர் மாளிகை வட்டாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications