எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு- கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் கொண்டாட்டம்
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் கூவத்தூரில் அடைபட்டுள்ள எம்எல்ஏக்கள் கொண்டாட்ட மனநிலைக்கு மாறியுள்ளனர்.
சென்னை: அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் கூவத்தூரில் கடந்த 9 நாட்களாக அடைபட்டுள்ள எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவிற்குப் பிறகு கடந்த ஒருவாரகாலமாக தமிழக அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா முதல்வராக முடியாமல் போனது. இப்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா.

சிறைக்கு செல்லும் முன் சசிகலாவால் அதிமுக சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தன்னை சந்திக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் 3வது முறையாக சந்திக்கச் செல்கிறார்.
இதையடுத்து அவரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது. இதனால் கூவத்தூரில் பெரும் கொண்டாட்டமான சூழ்நிலை நிலவுகிறது
9 நாட்களாக கூவத்தூரில் அடைபட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் இன்று முதலாவது தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உற்சாக மனநிலைக்கு மாறியுள்ளனர். இன்று ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பாரா? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரியவரும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications