கருணாநிதியின் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பு.. கொங்கு ஈஸ்வரன் இரங்கல்
சென்னை: முத்தமிழ் அறிஞர் கருணாநிதி இந்த மண்ணைவிட்டு மறைந்தது உலகத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பேரிழப்பு என்றும் அவருடைய மறைவை தாங்கக் கூடிய மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும், உலக தமிழர்கள் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.அர்.ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இந்த மண்ணைவிட்டு மறைந்தது உலக தமிழர்களுக்கு பேரிழப்பு. தமிழுக்கும் இழப்புதான். எதையும் தாங்கும் வலிமை கொண்டவர் தலைவர் கலைஞர்.

அவர் பள்ளியில் படித்த அனைவருக்கும் வலி தாங்கக் கூடிய பயிற்சியை அவர் கொடுத்திருந்தாலும் அவரையே இழக்கின்ற இந்த வலியை தாங்கக் கூடிய சக்தி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் இயற்கையின் இந்த சதியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
அவருடைய வாழ்க்கை பாதை, அரசியல் பாதை பயணிக்கின்ற அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக அமையும். தலைவர் கலைஞர் அவர்களுடைய மறைவை தாங்கக் கூடிய அந்த மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும், உலக தமிழர்கள் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications