பாஜகவினருக்கு காமராஜர் பெயரை உச்சரிக்ககூட தகுதியில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்
பாஜகவினருக்கு காமராஜர் பெயரை உச்சரிக்ககூட தகுதியில்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல அவருடைய பெயரை உச்சரிப்பதற்கு கூட பாஜகவினருக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை, புழல் அருகே காமராஜர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழிசை விருதுநகருக்குச் சென்று காமராஜருக்கு புகழ் சூட்டியிருக்கிறார். அதே போல, சேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நாங்களும் காமராஜருடைய புகழ் பாடுகிறோம் என்று சொல்கிறார்கள்.

பாஜகவினர் மக்கள் பழையவற்றை மறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றார்கள். இதே பாஜகவின் தாய்க்கட்சியான ஆர்.எஸ்.எஸ். காரர்கள், காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது வேல்கொண்டு, ஈட்டிகொண்டு கொலை செய்ய முயன்றார்கள் என்பதை நாடு மறக்காது. என்னதான் வேடம் போட்டாலும் பாஜக கட்சியினர் காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள்.
பாஜகவினர் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல அவரது பெயரை உச்சரிப்பதற்கு கூட அவர்களுக்கு தகுதியில்லை.
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் விரைவில் புழல் சிறையில் கம்பி எண்ணுவார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பேசத் தொடங்கியிருக்கும் இவர் கடந்த சில வாரமாக காங்கிரஸ் கட்சி பற்றி எல்லை மீறி பேசி வருகிறார் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்துகொண்டு பேசினார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications