'டம்'முன்னு இடி இடிச்சா.. 'பட்'டுன்னு டிவி, கம்ப்யூட்டரை ஆப் பண்ணிடுங்க...!
சென்னை: இடி, மின்னல் போன்ற நேரங்களில் டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், செல்போனில் பேசுவது போன்றவற்றை உடனடியாக நிறுத்தி விட வேண்டும் என்று தமிழக தலைமை மின் ஆய்வாளர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அவ்வப்போது இடியும், மின்னலும், பலத்த காற்றுமாக உள்ளது.
இந்த நிலையில் இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை மின் ஆய்வாளர் மக்களுக்கு அறவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள அறிவுறுத்தல்கள்...

மின்கசிவைத் தடுக்க வேண்டும்
வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டுகளில், ஈ.எல்.சி.பி. என்னும் மின் கசிவு தடுக்கும் கருவியை பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்த்திடுங்கள்.

சுவிட்ச் உடைந்திருந்தால் மாற்றி விடுங்கள்
உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளை உடனடியாக மாற்றி விடுங்கள்.

மின்கம்பிகளுக்கு மேல் கேபிள் வயர் போகக் கூடாது
டி.வி. ஆண்டெனா, கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

மின்கம்பங்களில் பந்தல் போடாதீர்கள்
மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.

டிரான்ஸ்பார்மர் பக்கம் போகவே கூடாது
மழைக்காலங்களில் மின் மாற்றிகள் அதாவது டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம்.

கம்பி அறுந்து விழுந்தால் அருகே போக வேண்டாம்
மழை மற்றும் பெரும் காற்றினால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல வேண்டாம். அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள்.

கட்டடம் கட்டும்போது இடைவெளி அவசியம்
மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டும்போது, போதுமான இடைவெளி விட்டு கட்டவும்.

சிறுநீர் கழிக்காதீர்கள்
மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்காதீர்கள்.

வெட்ட வெளியில் நிற்காதீர்கள்
இடி மற்றும் மின்னலின்போது, வெட்டவெளியில் இருக்காதீர்கள், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் நிற்காதீர்கள். மேலும் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத இடங்களில் தஞ்சம் அடையுங்கள்.

டிவியை ஆப் பண்ணுங்க..
டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி போன்றவற்றை மழை மற்றும் மின்னல் நேரங்களில் பயன்படுத்தாதீர்கள்.

சர்க்யூட்டுகளில் அதிக பளு கூடாது
மின் சர்க்யூட்டுகளில் அளவுக்கு மீறி பளு ஏற்றக் கூடாது. சுவிட்ச் மற்றும் பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது சரியானஅளவு திறன் கொண்டவற்றை பொறுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications