கட்சி பேரில் இருப்பதால் கலாம் படங்களை மறைக்கலாமா தேர்தல் ஆணையம்?- குமுறும் பொன்ராஜ்
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்காக நடைமுறைக்கு வந்துள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்களின் படங்களும் மறைக்கப்பட்டு வருவதற்கு கலாம் பெயரில் கட்சி தொடங்கியவரும், அவரது உதவியாளருமான பொன்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அப்துல் கலாம் மீதுள்ள மரியாதையால் கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் என்ற பெயரில் போர்டு ஒன்றை வைத்திருந்தனர்.
இந்தப் பலகை தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது என்று சொல்லி, தேர்தல் ஆணைய பணியாளர்கள் சிலர் பிளாஸ்டிக் பையால் கலாம் முகத்தை மூடினர்.

சண்டை போட்ட டிரைவர்கள்:
இதனால் அதிருப்தியான ஆட்டோ டிரைவர்கள் நாடே கொண்டாடும் உன்னத மனிதர் கலாம். அவர் முகத்தை எப்படி மறைக்கலாம் என சண்டைபோட்டுள்ளனர்.

கட்சி இருக்கே கலாம் பெயரில்:
ஆனால், ஆணையத்தின் ஊழியர்களோ கலாம் பெயரில் அவரது உதவியாளர் பொன்ராஜ் அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி நடத்தி வருகிறார். ஆணையத்தின் விதிப்படிதான் கலாம் முகத்தை மறைக்கிறோம் என பதில் கூறியுள்ளனர். இதைப் போலவே, மாநிலம் முழுவதும் உள்ள கலாமின் படத்தை மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்துக்கு தேவையில்லை:
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொன்ராஜ், " இப்படியொரு சம்பவத்தைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு இது தேவையில்லாத வேலை. நோட்டீஸ் ஒட்டக் கூடாது. சுவர் விளம்பரம் எழுதக் கூடாது என்று சொன்னால் சரி. அதைவிட்டுவிட்டு உலகமே மதிக்கும் தலைவரை இப்படி பிளாஸ்டிக் பை போட்டு மறைப்பது அவசியமற்றது.

தலைவர்களை அகற்ற முடியாது:
காந்தி, காமராஜர், அண்ணாதுரை ஆகியோரது படங்களை மறைத்தாலும், மக்கள் மனதில் இருந்து இந்தத் தலைவர்களை அகற்ற முடியாது. அதைப்போலத்தான் அப்துல் கலாம் அவர்களும். மறைப்பதால் அது என்ன என்ற கேள்விதான் மக்கள் மனதில் வரும்.

கின்னஸ் சாதனை படைத்தவர்:
உலகிலேயே அதிகப்படியான போட்டோக்கள் எடுக்கப்பட்டது கலாம் கூடத்தான். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுமளவுக்கு கோடிக்கணக்கான மக்கள் அவரோடு படம் எடுத்திருக்கிறார்கள். அதனால் அந்தப் படங்களை மறைத்துவிட முடியுமா என்ன..தேர்தல் ஆணையம் தேவையற்ற வேலைகளில் ஈடுபடுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications