ஏற்காடு இடைத்தேர்தல்: அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த தொகுதியும், அந்த தொகுதியைக் கொண்ட சேலம் மாவட்டமும் அன்று முதல் தேர்தல் விதிகளுக்கு உட்பட்ட பகுதிகளாக உள்ளன.
இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி சேலம் சென்ற அமைச்சர் வீரமணி, சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி, தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்றும், தேசிய கொடியுடன் அரசு வாகனத்தை ஏற்காடு தொகுதியில் பயன்படுத்திய அமைச்சர் வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகளை சந்தித்தது, அரசு வாகனத்தை பயன்படுத்தியது பற்றி அமைச்சர் வீரமணியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.
மேலும் இந்த நோட்டீஸுக்கு, அமைச்சர் வீரமணி இரு தினங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications