தமிழக- கேரளா எல்லையில் ரூ.8 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
செங்கோட்டை: தமிழக- கேரளா எல்லையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துவரப்பட்ட ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் ஜீப்பை தேர்தல் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடையநல்லூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தமிழக- கேரளா எல்லைப் பகுதியான புளியரை சவுக்கை இசக்கியம்மன் கோவில் பகுதியில் பறக்கும் படை அலுவலர் குமரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது தென்காசியில் இருந்து கேரளா நோக்கி "ரயில்வே பணி" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஜீப் சென்றது.

அந்த ஜீப்பை மறித்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை பணியில் ஒரு பிரிவான எடமண் --புனலூர் இடையே ரயில்பாதை பணியினை மேற்கொண்டு வரும் ஆந்திராவின் "ரயில் ஒன் புராஜெக்ட்" நிறுவன இயக்குனர் மல்லிகா அர்ஜுனராவ் அந்த ஜீப்பில் இருந்தார். அவர் வைத்திருந்த பையில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தென்காசி வங்கியில் இருந்து எடுத்து வரப்பட்ட ரூ.8 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் செங்கோட்டை தாசில்தாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் பணத்தையும், ஜீப்பையும் பறிமுதல் செய்து செங்கோட்டை தாலுகா அலுவலகம் கொண்டு விசாரணை நடத்தினர்.
இந்த பகுதியில் கடந்த வாரம் ரூ16 லட்சம் ரொக்கத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications