வீணாகிப் போன 'வாங்கமாட்டோம் நோட்டு' பிரசாரம்.. படுவிரக்தியில் தேர்தல் ஆணையம்
ஆர்கே நகரில் ஓட்டுக்கு பணத்தை விற்கமாட்டோம் என்கிற பிரசாரம் கேவலமான தோல்வியை சந்தித்தில் தேர்தல் ஆணையம் விரக்தியில் இருக்கிறதாம்.
சென்னை: ஆர்.கே.நகரில் தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம் என்பதற்காக செய்த பிரசாரம் முழுவதும் வீணாகிப் போனதே தேர்தல் ஆணைய அதிகாரிகள் நொந்து போயுள்ளனராம்.
ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே தொகுதி மக்களிடையே வாக்கு ஜனநாயகத்தை பரவலாக கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு விசயத்தில் கவனம் செலுத்தியது தேர்தல் ஆணையம். மதுரை திருமங்கலத்தில் தொடங்கிய ஃபார்முலாவை ஆர்கேநகரில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தேர்தல் அதிகாரிகள் நினைத்தனர்.

இதன்படி களமிறங்கிய தேர்தல் ஆணையம், 'போடுவோம் ஓட்டு; வாங்கமாட்டோம் நோட்டு' என்கிற முழக்கத்துடன் விளம்பர நோட்டீஸ்களை அச்சடித்து தொகுதி முழுவதும் விநியோகித்தது. மேலும், 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல. ஜனநாயக ஆயுதத்தை முறையாக பயன்படுத்துவேன்' என தெருமுனைப் பிரச்சாரங்களையும் செய்தது தேர்தல் ஆணையம்.
ஆனால் எந்த பிரசாரமுமே எடுபடவில்லை. இதனால் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக செலவிடும் பணத்தை வேறுவகையில் பயன்படுத்தினால் பிரயோஜனமாவது இருக்கும் என ஆதங்கத்துடன் விவாதித்திருக்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாத போக்கினைப் பற்றி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு விரிவாகவே கடிதம் எழுதியுள்ளார் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி.
தமிழக நிலவரம் குறித்து விவாதிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளோ, வெளி மாநிலங்களில் சீனியர் அமைச்சராக இருக்கும் ஒருவரிடம் என்ன பணம் குவிக்கப்பட்டிருக்குமோ அது இங்கே வார்டு கவுன்சிலரிடமே இருக்கிறதே.. இப்படியெல்லாமா தமிழகத்தில் கொள்ளையடித்திருக்கிறார்கள் என நொந்து போகின்றனராம்.. உடனிருக்கும் தமிழக அதிகாரிகள் தலைகுனியத்தான் வேண்டியிருக்கிறதாம்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications