ஸ்ரீரங்கம் தொகுதி சிறப்பு பார்வையாளராக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்
திருச்சி: கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனில் குமார் ஜா ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக சிறப்பு பார்வையாளராக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இத் தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் திருச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா ஆலோசனை நடத்தினார். திருச்சி ஆட்சியர் பழனிசாமி, தேர்தல் நடத்தும் அதிகாரி மனோகரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். முன்னதாக ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பணிகளை சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் தொகுதியில் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
சிறப்பு பார்வையாளர்
ஏற்கெனவே பொது, காவல், செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறப்புப் பார்வையாளராக கர்நாடகம் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அனில்குமார் ஜாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. விரைவில் அவர் திருச்சி வந்து தேர்தல் பணிகளை கண்காணிப்பார்.
கண்காணிப்பு
தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து வரும் நிலையில், பண விநியோகம், பரிசு வழங்குதல், மதுபாட்டில்கள் வழங்குதல் போன்ற தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுபவர்களை வீடியோ, புகைப்படமாக எடுத்து அனுப்பும் வகையில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. கூகுள் பிளே அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, தேர்தல் ஆணைய இணைய முகவரிக்குச் சென்று புகாரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அளிக்கலாம்.
பறக்கும்படை
ஏற்கெனவே 24 பறக்கும்படை குழுக்கள் உள்ள நிலையில், மேலும் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும்படையினர் எடுத்த நடவடிக்கையினால் இதுவரை 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறக்கும் படையினர் இனி 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு பறக்கும் படையிலும் 5 பேர் உள்ளனர். இவர்கள் 3 ‘ஷிப்டு' ஆக பணியாற்றி வருகிறார்கள்.
போலி வாக்காளர்கள்
நீதிமன்ற உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு குறித்த விவரங்களை வீடுதோறும் சென்று ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுபட்டவர்கள், வீடு மாறிச் சென்றவர்கள், இறந்தவர்கள் விவரங்கள் சேகரிப்புப் பணியை மேற்கொள்ளவோம்.
வெளி மாவட்ட ஆட்கள்
இதுவரை ஸ்ரீரங்கம் தொகுதியில் 13,000 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். பிப்ரவரி 11ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் தொகுதி வாக்காளர்களைத் தவிர இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இருக்க அனுமதியில்லை. அதைத் தொடர்ந்து விடுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.
விதிமீறல்
பள்ளி கல்வி துறை அமைச்சர் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மாணவர்களை பயன்படுத்தியதாக புகார் வந்து உள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications