எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பணம் திருடியதாக விசாரிக்கப்பட்ட கார் டிரைவரின் தந்தை திடீர் மரணம்!
எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பணம் திருடியதாக விசாரிக்கப்பட்ட கார் டிரைவரின் தந்தை திடீர் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பணம் திருடியதாக விசாரிக்கப்பட்ட அவரது கார் டிரைவரின் தந்தை நேற்று திடீரென மரணடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில் சசிகலா அணியின் முதல்வராக முன்னிறுத்தப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி வீட்டில் திருட்டு
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கார் டிரைவரின் தந்தை சொக்கலிங்கம் விஷம் குடித்து திடீரென இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ரூ94 லட்சம் திருட்டு போயுள்ளது.

டிரைவரின் தந்தையிடம் விசாரணை
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் கார் டிரைவரான செந்திலின் தந்தை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சொக்கலிங்கத்தை போலீசார் விசாரித்துள்ளனர். போலீசார் விடிய விடிய சொக்கலிங்கத்திடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தற்கொலை
இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் சொக்கலிங்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்கள் மீது முறைகேடு புகார்கள் உள்ளன.

சர்ச்சை
அதேபோல தலித் சமூகத்தைச் சேர்ந்த போலீசார் ஒருவரை கொடூரமாக எடப்பாடி பழனிச்சாமியே தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கார் டிரைவரின் தந்தையின் திடீர் மரணமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications