தினகரனுக்கு எதிராக எடப்பாடி கோஷ்டி பகிரங்க போர்க்கொடி- அதிகாரப்பூர்வமாக உடைந்தது சசிகலா கோஷ்டி!
தினகரனுக்கு எதிராக எடப்பாடி கோஷ்டி பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியதால் அதிமுகவின் சசிகலா கோஷ்டி அதிகாரப்பூர்வமாக உடைந்தது.
சென்னை: தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் சசிகலா கோஷ்டி இரண்டாக சிதறியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். அத்துடன் முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட அதிமுகவில் ஓபிஎஸ் கலகக் குரல் எழுப்பினார்.
இதனால் அதிமுக ஓபிஎஸ், அதிமுக சசிகலா கோஷ்டி என்றானது. பின்னர் சசிகலாவும் தினகரனும் சிறைக்குப் போக அந்த கோஷ்டியே அப்படியே எடப்பாடி கோஷ்டியாக உருமாறியது.

11 எம்.எல்.ஏக்கள்
அதேநேரத்தில் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏக்கள் தனி ஆவர்த்தனம் வாசித்து வந்தனர். இந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையானார் தினகரன்.

மீண்டும் அதிமுக
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுகவில் தொடர்ந்து இயங்குவேன் என தடாலடி காட்டினார். இதற்கு எடப்பாடி கோஷ்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

ஜெயக்குமார் தலைமையில்..
இந்நிலையில் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றார் தினகரன். இதனிடையே சென்னையில் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் ஒன்று கூடி இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினர்.

தினகரனை ஒதுக்கி வைக்கிறோம்
இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. உறுதியாக உள்ளோம். அதிமுகவை விட்டு ஒதுங்குவதாக கூறிவிட்டார். அதைத்தான் தினகரன் செய்ய வேண்டும் என போட்டுத் தாக்கினார்.

மூன்றாக உடைந்த அதிமுக
இதனால் அதிமுகவின் சசிகலா கோஷ்டி அதிகாரப்பூர்வமாகவே இரண்டாக உடைந்துவிட்டது. அதிமுக ஓபிஎஸ் அணி, அதிமுக சசிகலா- தினகரன் கோஷ்டி, அதிமுக எடப்பாடி கோஷ்டி என பகிரங்கமாக 3 ஆக சிதறிவிட்டது அதிமுக.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications