ஜெயலலிதா, சசிகலாவிற்கு துரோகம் செய்தவர்கள் மக்களுக்கு என்ன செய்துவிடுவார்கள் : டி.டி.வி தினகரன்
ஜெயலலிதா, சசிகலாவிற்கு துரோகம் செய்தவர்கள் மக்களுக்கு என்ன செய்துவிடுவார்கள் என்று டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னார்குடி : ஜெயலலிதா, சசிகலாவிற்கு துரோகம் செய்த இந்த ஆட்சியாளர்கள் தமிழக மக்களுக்கு மட்டும் வேறு என்ன செய்து விடப்போகிறார்கள் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று காலை மன்னார்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை. தமிழர்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் துரோகம் இழைத்துவிட்டார்கள் .
தாங்கள் ஆட்சியில் அமரக் காரணமான ஜெயலலிதா, சசிகலாவிற்கே துரோகம் செய்த இவர்கள் தமிழக மக்களுக்கு மட்டும் என்ன புதிதாக செய்துவிடப்போகிறார்கள். விரைவில் எடப்பாடி ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்படும்.
110 விதியின் கீழ் பல நலத்திட்டங்களை அறிவித்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரது ஆட்சி என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் காவிியில் நீரை திறந்துவிடமுடியாது என்று அதே விதியின் கீழ் அறிவிப்பது மிகவும் மோசமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications