நீட் விவகாரம்... எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் பதவி விலக வேண்டும்- தினகரன் கோரிக்கை
நீட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஓ.பன்னீர் செல்வமும் பதவி விலக வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி: நீட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் பதவி விலக வேண்டும் என்று டிடிவி தினகரனஅ வலியுறுத்தினார்.
புதுவையில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க டிடிவி தினகரன் புதுவை வந்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், முதல்வராக தேர்ந்தெடுத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வர்.
முதல்வரை மாற்றக் கோரி புதுவையில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர். ஆளுநரும், ஜனாதிபதியும் நல்ல நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஜெயந்தியும், உமா மகேஸ்வரியும் சொந்த காரணங்களுக்காக அவர்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

துரோகம் செய்கின்றனர்
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் நாங்கள் அமர வைத்த முதல்வர் கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் செய்கின்ற முதல்வராக மாறிவிட்டார். கட்சிக்கு துரோகம் செய்த பன்னீர்செல்வத்தை கூட்டணி சேர்த்துகொண்டு செயல்பட்டு வருகிறார். உட்கட்சி விவகாரத்தில் கவர்னர் தலையிட மாட்டோம் என தெரிவித்துள்ளார். அவர் அப்படி சொல்வதற்கான காரணம் எங்களுக்கு தெரியும்.

கட்சியை காக்க...
சட்டமன்ற உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி இங்கு தங்க வைக்கப்படவில்லை. கட்சியை காப்பற்றுவதற்காகவே அவர்கள் இங்கு தங்கியுள்ளனர். முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கவர்னர் நிறைவேற்ற என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக தங்கியுள்ளனர்.

ஓரிரு நாள்கள் பொறுமை
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் கவர்னரும், ஜனாதிபதியும் தலையிட வேண்டும் என்பதற்காகவே சட்டமன்ற உறுப்பினர் காத்திருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் காத்திருப்போம். இல்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது எங்களுக்கு தெரியும் அதை செய்வோம். மாணவி அனிதா மரணத்திற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக தேவையில்லை.

எல்லாம் சரியாகிவிடும்
இன்றைக்கு முதல்வராக இருக்ககூடிய பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்சும் பதவி விலகினாலே எல்லாவற்றை நாங்கள் சரிசெய்துவிடுவோம். நீட் இல்லை என்றால் மாணவி அனிதாவிற்கு மருத்துவ கல்லூயில் இடம் கிடைத்திருக்கும். மாநில கல்வி வழியில் நீட் தேர்வு நடைபெற்றிருந்தால் மாணவி அனிதா தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்திருக்க முடியும். நீட் தேர்வு என்பது தமிழகத்திற்கு தேவையில்லை.

வீட்டிற்கு செல்லும் நேரம்
மாநில பாடத்திட்டத்தில் நீட் தேர்வு நடைபெற்றிருந்தால் இதுபோன்ற அகால மரணம் நடந்திருக்காது. மத்திய அரசு வரும் ஆண்டுகளில் தமிழக மக்களின் தேவை என்ன, கோரிக்கை என்ன என்பதை உணர்ந்து செயல்பட. மத்திய அரசு அடுத்த ஆண்டு முதல் மாநில பாடதிட்டத்தில் நீட் தேர்வை நடத்தினால்தான் கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெற முடியும். எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications