ஓ.பி.எஸ் கோஷ்டிக்கு கல்தா.. எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி திடீர் முடிவு.. பின்னணி என்ன?
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியை கழற்றிவிடும் முடிவில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி இருப்பதாக கூறப்படுகிறது.
சில முக்கிய பதவிகள் மற்றும் சசிகலா குடும்ப ஆதிக்கத்தை ஒழிப்பது ஆகியவை பன்னீர்செல்வம் அணியின் பிரதான கோரிக்கைகளாக இருந்து வருகின்றன. ஆனால் பதவியை விட்டுத்தர எடப்பாடி கோஷ்டி தயாரில்லை.
இதற்காக சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்து ஆதரவின்றி நிற்கவும் அவர் தயாரில்லை. எனவே இப்போது உள்ள நிலை தொடரவே எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். மத்திய அரசின் உதவியை நேரடியாக பெறுவது என்பது எடப்பாடி பழனிச்சாமி திட்டமாக உள்ளதாம்.

சேலத்தில் பேச்சு
சேலம் அங்கம்மாள் காலனியில், அதிமுக மாவட்ட, மாநகர கழக அலுவலகத்தில் அதிமுக அம்மா அணியின் ஆலோசனை கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் அணியினர் வைத்துள்ள இரண்டு நிபந்தனைகளில், ஒன்று நீதிமன்றத்திலும் இன்னொன்று தேர்தல் ஆணையத்திலும் உள்ளபோது, அவற்றை எப்படி ஏற்க முடியும் என கேட்டுள்ளார்.

சிபிஐ விசாரணை
அதாவது ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டி, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடியாது என தெரிவித்துள்ளார். சசிகலா நியமனம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது.

நாங்கள் ரெடியாக இருந்தோம்
தாங்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில், ஓ.பி.எஸ் அணியினர் அந்தர் பல்டி அடித்துவிட்டனர். பேச்சுவார்த்தை நடைபெறக்கூடாது என சிலர் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சியும், கட்சியும்
தற்போது ஆட்சியையும் பிடித்தாகிவிட்டது, கட்சியையும் பிடித்தாகிவிட்டது என்று எம்.எல்.ஏ வெங்கடாசலம் பேசியதை எடப்பாடியார் சுட்டிக்காட்டியுள்ளார். வந்தால் லாபம், வரவில்லை என்றால் கவலையில்லை என்ற மனநிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அணி உள்ளது.

பன்னீரும் ரெடி
ஆட்சி தங்கள் கையில் இருந்தால், தங்களுக்கு எம்.எல்.ஏ.க்களின் பலம் கூடிக்கொண்டே செல்லும் என்பது எடப்பாடி பழனிச்சாமி முடிவாக உள்ளது. அதிமுக அம்மா அணியினர் இவ்வாறு கூறிவருகிறார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும்தான் பன்னீர்செல்வம் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப் பயணம் செய்து மக்கள் ஆதரவை திரட்ட முடிவு செய்துள்ளாராம்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications