அமைச்சர்களுடன் ஹாயாக டீ சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி.. புதுக்கோட்டை சுவாரஸ்யம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாலையோர கடையில் டீ குடித்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
புதுக்கோட்டையில் ரூ.231 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டடத்தை திறந்து வைத்தார். இதனிடையே திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ண அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் கலந்துகொண்ட விழா என்பதால் சலசலப்பு இல்லாமல் நடத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக கவனமாக கையாண்டனர். இந்நிலையில் விழாவை முடித்துவிட்டு திரும்பும் வழியில் கீரனூரில் சாலையோரம் உள்ள ஒரு டீக்கடைக்கு திடீரென விசிட் அடித்தார் முதல்வர்.

பின்னர் ஸ்டாலின், ஓபிஎஸ் பாணியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் நிர்வாகிகள் புடை சூழ டீ சாப்பிட்டுக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த டீ கடையில் சுவாரஸ்யம் என்னவென்றால் டீ சுவையாக இருந்தால் வாடிக்கையாளர்கள் கடை முன்பு உள்ள மணியை அடித்துச் செல்வது வழக்கமாம்.
ஒரு பக்கம் தினகரன் அணி, மற்றொரு புறம் ஓபிஎஸ் அணி என பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஹாயாக அமர்ந்து டீ சாப்பிட்ட புகைப் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications