தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல.. கவர்னர் ஆட்சிதான்.. தினகரன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவான டிடிவி தினகரன் பெசன்ட்நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரிக்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக ஐபிஎல் போட்டியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தமிழக அரசு அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கிறது என்றும் தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
ஆட்சியில் இருந்தால் மட்டும் போதும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதாகவும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியல்ல, கவர்னர் ஆட்சிதான் என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தகுதியான ஆட்கள் தமிழகத்தில் இல்லையா என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறம்தான் ஆட்சி செய்யும் என ஜெயக்குமார் கூறியது தங்களைதான் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications