டெல்லியில் அண்ணாமலை மீட்டிங்.. இங்கே ஒரே பதற்றம்.. டாப் தலைகளை வர சொன்ன எடப்பாடி! அதிரும் நெடுஞ்சாலை
என்ன செய்யலாம்.. என்ன முடிவு எடுக்கலாம் என்று ஆலோசனை செய்ய அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளார்.
சேலம்: சேலத்தில் உள்ள வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக எடப்பாடி தரப்பு - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பாக இன்னும் பாஜக முடிவு எடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக பாஜக தீவிரமான ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
பாஜகவில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் இதில் நிலவி வருகிறதாம். அதில் சிலர், பாஜக இப்போதுதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை பெற்று வருகிறது. மக்கள் நம்மை திரும்பி பார்க்க தொடங்கி உள்ளனர்.

இடைத்தேர்தல்
இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை இழந்து, வாக்கு வங்கியும் குறைந்தால், தோல்வி அடைந்தால் அது பெரிய சர்ச்சையாகும். தமிழ்நாட்டில் நமக்கு கிடைத்து இருக்கும் சர்ஜ் காணாமல் போய்விடும். நம்மளுடைய இலக்கு லோக்சபா தேர்தலாகவே இருக்க வேண்டும். இதில் வெல்ல முடியாது என்று தெரிந்தும் போட்டியிடுவதால், நமக்கான ஆதரவு சரியாகவே வாய்ப்பு உள்ளது . மாறாக 2024 லோக்சபா தேர்தலுக்காக நாம உழைக்க வேண்டும் என்று சில மூத்த நிர்வாகிகள் பாஜக கூட்டத்தில் அறிவுரை வழங்கி உள்ளனராம்.

நம்பிக்கை
அதே சமயம் இன்னும் சிலரோ, இங்கே நாம் வெற்றிபெறவில்லை என்றாலும் லோக்சபா தேர்தலுக்கு நல்ல முன்னோட்டமாக இருக்கும். இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட நல்ல வாக்கு சதவிகிதத்தை எடுத்தாலே அது பாஜகவிற்கு பெரிய பலமாக இருக்கும். தமிழ்நாட்டில் தங்களின் வாக்கு சதவிகிதம் 10க்கும் மேல் உள்ளது என்று பாஜக கூறி வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மட்டும் 10% வாக்குகளுக்கு அருகில் பெற்றுவிட்டால் போதும் லோக்சபா தேர்தலில் அதை வைத்தே பாஜக அதிக இடங்களை அதிமுகவிடம் கேட்க முடியும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களையும் பெற முடியும். கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு இது கூடுதல் பவரை கொடுக்கும். தோல்வி அடைந்தாலும் கூட பாஜகவிற்கு ஒரு வித நம்பிக்கையை இது கொடுக்கும் என்று கூறி வருகிறார்களாம்.

எடப்பாடி
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தரப்பு கே. எஸ் தென்னரசை தங்கள் தரப்பு வேட்பாளராக நியமனம் செய்துள்ளது. விரைவில் அவர் பிரச்சாரத்தையும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி தரப்பு வேட்பாளரை பாஜக ஆதரிக்குமா? ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமா? அல்லது தனித்து நிற்குமா? அல்லது தேர்தலை புறக்கணிக்குமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. . இதனால் பாஜக தரப்பிற்கு பிரஷர் எகிறி உள்ளது. இதையடுத்தே என்ன செய்யலாம்.. என்ன முடிவு எடுக்கலாம் என்று ஆலோசனை செய்ய அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளார். இன்று அவர் பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஈரோடு
இதையடுத்து சேலத்தில் உள்ள வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக எடப்பாடி தரப்பு - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை வீட்டில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார். மூத்த மாஜி அமைச்சர்கள் செங்கோட்டையன் உட்பட ஒரு சிலர் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று அதிமுக பணிமனையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையானது. இந்த நிலையில் பாஜகவுடன் சமாதானமாக போகலாமா? தேர்தலில் எப்படி வியூகம் வகுக்கலாம்? ஓபிஎஸ் தரப்பை எப்படி சமாளிக்கலாம்? இரட்டை இலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பது தொடர்பாக எடப்பாடி தரப்பு ஆலோசனை செய்து வருகிறதாம். இதனால் அவரின் நெடுஞ்சாலை வீடே கொஞ்சம் பதற்றமாக காணப்பட்டு வருகிறது.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications