காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.. மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: மேகதாது அணை உட்பட தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கர்நாடக அரசின் எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தை பாதிக்கும் கர்நாடகாவின் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்க கூடாது. ரூ.5,912 கோடியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை பெற மத்திய நீர்வள ஆணையத்தை அணுகவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளது.
மேகதாது உள்ளிட்ட எந்த அணை திட்டத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என்றும், அணைகட்ட அனுமதி பெற மத்திய நீர்வள ஆணையத்தை அனுக கர்நாடக திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவிரி பிரச்சனை குறித்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது,மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது தன்னிச்சையானது. சக வடி நில மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல்,அணைக்கட்டுக்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே மேகதாதுவில் அணைகட்டுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்.மேலும் அணை கட்டுவதற்கான தொழில்நுட்ப அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது." என எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications