பற்றி எரியும் அதிமுக.. சபாநாயகருடன் எடப்பாடி அவசர சந்திப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக 3 அணிகளாக சிதறியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் அணி உதயமான நிலையில் சசிகலா தலைமையிலான அணி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு சார்பாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கியதில் எந்த மாற்றமும் இல்லை என எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் நேற்று அறிவித்தனர். டிடிவி தினகரனை கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்கக்கூடாது என எச்சரித்திருந்தனர்.

அரசு கவிழும் ஆபத்து
இந்நிலையில் எடப்பாடி அணி இரண்டாக உடைந்துள்ளது. டிடிவி தினகரனுக்கு 21 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரனை சந்திக்கும் எம்எல்ஏக்களின்ன எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எடப்பாடி தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து உருவாகியுள்ளது.

சபாநாயகருடன் சந்திப்பு
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுவை திடீரென சந்தித்துள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாலை எம்எல்ஏக்களுடன்
இதனிடையே இன்று மாலை 9 மாவட்ட எம்எல்ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கவுள்ளார். அப்போது ஆட்சி மற்றும் கட்சி நிலவரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

நாளை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்
நாளை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. வரும் 14 ஆம் தேதி சட்டசபைக் கூட்டம் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications