ரூ3, 000 கோடியில் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை அளிக்கும பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை அளிக்கும பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்காக முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015ஆம் ஆண்டு பைபர் நெட் கார்ப்ரேஷன் எனும் தனி அமைப்பு உருவாக்கப்பட்டு பாரத் நெட் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை அளிக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழக கிராமங்களுக்கு இணையதள வசதி அளிக்கும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பைபர் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு தொடங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உதவியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் விதமாக ரூ.50 லட்சம் நிதி முதற்கட்டமாக ஒதுக்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்தார். முன்னதாக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications