பழங்குடியினரின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் - முதல்வர் உறுதி
Recommended Video

நீலகிரி மாவட்டம்
44. 1969-ஆம் ஆண்டு கூடலூர் ஜன்மம் நில (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரிக்கு மாற்றுதல்) சட்டத்தின் கீழ் கூடலூர் ஜன்மத்திற்கு உட்பட்ட நிலங்களை தீர்வு செய்வதற்கான எஞ்சிய பணிகளை விரைவில் முடிப்பதற்கு, மூன்று நபர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவில், நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே பணிபுரிந்துள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும், வன அதிகாரி ஒருவரும், வருவாய்த் துறை அதிகாரி ஒருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். உள்ளூரில் வசிப்பவர்கள், குறிப்பாக பழங்குடியினர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இப்பணிகளை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
45. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு கூடுதல் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டம்
46. கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கியச் சாலையான திருச்சி பிரதான சாலையில் சிங்காநல்லூர், ராமநாதபுரம், சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் 2018-19ல் மேற்கொள்ளப்படும்.
47. கோயம்புத்தூர் மாவட்டம், திருச்சி சாலை, எல்&டி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி, தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் 2018-19ல் மேற்கொள்ளப்படும்.
48. கோயம்புத்தூர் மாவட்டம், ஊட்டி செல்லும் துடியலூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் 2018-19ல் மேற்கொள்ளப்படும்.
49. கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலைக்கு எளிதாகச் செல்லும் வகையில் லாலி ரோடு அருகே ஒரு பாலம் அமைக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
50. கோயம்புத்தூர் மாவட்டம், சாய்பாபா கோயில் சந்திப்பு, துடியலூர் சந்திப்பு மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் 2018-19ல் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டம்
51. ஈரோடு மாவட்டம், அந்தியூரில் ஒரு புதிய போக்குவரத்து காவல் நிலையம் ஏற்படுத்தப்படும்.
திருப்பூர் மாவட்டம்
52. திருப்பூர் மாவட்டம், பல்லடம் புறவழிச் சாலை 8.3 கிலோ மீட்டர் நீளம் அமைக்கும் பணியில், முதற்கட்டமாக விரிவான திட்ட அறிக்கை நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்படும்.
53. உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 படுக்கைகள் கொண்ட பொதுப் பிரிவு ஏற்படுத்தப்படும். மேலும், 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்படும்.
54. பல்லடம் உட்கோட்டத்தில் உள்ள மங்கலம் காவல் நிலைய காவல் ஆளிநர்களுக்கு 80 குடியிருப்புகள் 11 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும்.
திருநெல்வேலி மாவட்டம்
55. சங்கரன்கோவிலில் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு 96 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டித் தரப்படும்.
56. தென்காசி போக்குவரத்து காவல் நிலையத்திற்கு 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டித் தரப்படும்.
57. சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டித் தரப்படும்.
58. திருநெல்வேலி மாவட்டம் மானூரில் 52 குடியிருப்புகளும், ஊத்தமலையில் 34 குடியிருப்புகளும் என மொத்தம் 86 காவலர் குடியிருப்புகள் 15 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும்.
தூத்துக்குடி மாவட்டம்
59. தூத்துக்குடி மாவட்டம், சூழ-7 மற்றும் சூழ-45யும் இணைக்கும் கயத்தாறு - கடம்பூர், பசுவந்தனை -எப்போதும் வென்றான் ஆகிய சாலைகளை 31 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி 2018-19 மற்றும் 2019-20ல் ஊசுஐனுஞ திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
60. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மருத்துவ உபகரணங்கள் 8.95 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். இப்பிரிவிற்கு 6 மருத்துவர்கள், 25 செவிலியர்கள் உள்ளிட்ட 31 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
61. தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன லீனியர் ஆக்ஸிலேட்டர் (Linear Accelerator) கருவி அமைக்கப்படும்.
62.நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்திற்கு ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டித் தரப்படும்.
63.தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திற்கு ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications