For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை: மகப்பேறு பிரிவுக்கு கூடுதல் கட்டடம்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் 84 திட்டங்களை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    காஞ்சிபுரம் மாவட்டம்

    23.காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு கூடுதல்
    கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும்.

     Edappadi Palanisamy speech about police station death

    திருவள்ளூர் மாவட்டம்
    24.திருவள்ளூர் மாவட்ட ஆயுதப் படை, கவரப்பேட்டை காவல் நிலைய காவலர் குடியிருப்பு மற்றும் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு
    குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

    திண்டுக்கல் மாவட்டம்

    25.கொடைக்கானல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம் ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய்
    செலவில் கட்டித் தரப்படும்.

    26.ஒட்டன்சத்திரத்தில் 25 குடியிருப்புகள், கன்னிவாடியில் 3 குடியிருப்புகள் என மொத்தம் 28 காவலர்களுக்கான குடியிருப்புகள் 5 கோடியே
    5 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும்.

    மதுரை மாவட்டம்

    27.வைகை ஆற்றின் குறுக்கே மாடக்குளத்தில் படுகை அணை 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    28.மதுரை மாவட்டம், வைகை ஆற்றின் குறுக்கே மண்ணடிமங்களத்தையும் இரும்படியையும் இணைக்கும் வகையில் உயர்மட்டப் பாலம் அமைக்கும்
    பணி 18 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

    29.தேசிய சிறார் நலத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்படும்.

    தேனி மாவட்டம்

    30.ஆண்டிப்பட்டி மற்றும் மயிலாடும்பாறை ஒன்றியங்களில் விடுபட்டுப் போன பகுதிகளுக்கு வைகை அணைக்கு கீழ் பகுதியிலிருந்து புதிய கூட்டுக்
    குடிநீர் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    31. தேனி மாவட்டம், விவசாயத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டம் செல்வதற்கு கம்பம் மெட்டு 78 கி.மீ. சுற்றிச் செல்வதற்குப் பதிலாக,
    சாக்களத்து மெட்டு பகுதியில் 19 கி.மீ. நீளத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    32.தேனி மாவட்டம், மேகமலை மற்றும் ஹைவேவிஸ் பகுதியில் இரண்டாம் கட்டமாக 13 கி.மீ. நீளத்திற்குச் சாலை வசதி ஏற்படுத்த விரிவான திட்ட
    அறிக்கை தயாரிக்கப்படும்.

    33.தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பிரிவு விரிவாக்கம்
    செய்யப்படும்.

    34.ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் தேனி காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டித்
    தரப்படும்.

    சேலம் மாவட்டம்

    35.அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அவசர விபத்து சிகிச்சை பிரிவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள்
    வழங்கப்படும்.

    36.ஓமலூரில் காவல் துறையினருக்கு ஒரு கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடம் கட்டப்படும்.

    37.தேவூர் காவல் நிலையத்திற்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.

    38.ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு 45 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும்.

    39.சேலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கு 65 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.

    கரூர் மாவட்டம்

    40.கரூர் மாவட்டத்தில் இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நான்கு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்காக 6
    குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

    நாமக்கல் மாவட்டம்

    41. குமாரபாளையம் நெடுஞ்சாலை பாதுகாப்புப் பணிக்கு புதியதாக ஒரு காவல் அலகு அமைத்துத் தரப்படும்.

    சிவகங்கை மாவட்டம்

    42. 12 சிறு குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரங்களை பெருக்கும் பொருட்டு புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    43. சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு 70 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.

    English summary
    Today the 3 days conference of IAS/ IPS officers ends. CM Edappadi Palanisamy announces 84 projects for TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X