• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தமிழகம் முழுவதும் 84 திட்டங்களை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

  By Lakshmi Priya
  |
   தமிழகம் முழுவதும் 84 திட்டங்களை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

   சென்னை : சென்னையில் நடைபெற்ற ஐஏஎஸ்- ஐபிஎஸ் மாநாட்டில் தமிழகம் முழுவதும் 84 திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

   சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 5-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு தொடங்கியது. 3 நாட்கள் தொடங்கிய மாநாடு இன்று முடிவடைந்தது. அப்போது 84 திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.

    Edappadi Palanisamy speech about police station death

   அந்த விழாவில் அவர் பேசுகையில், கடந்த மூன்று நாட்களாக நம்மிடையே நடைபெற்ற கருத்து பரிமாற்றம், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லும் விதமாக அமைந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது.

   இங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட ஒவ்வொரு கருத்தும், ஆலோசனைகளும் மாநில வளர்ச்சியில் உங்களுக்கு உள்ள அக்கறையை அறிந்து கொள்ள எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே நான் உணர்கிறேன்.

   முதல் நாளில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான விவாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. இரண்டாவது நாளில், பொது மக்களின் நலன் மற்றும் அவர்களின் தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்வது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.

   இன்று, காவல் துறை செயல்பாடுகள் குறித்தும் சில இனங்களில், அரசின் உத்தரவை வேண்டியும் காவல் துறை அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இம்மாநாட்டின் மூலம், இந்த அரசின் கொள்கைகளையும், அரசின் நலத் திட்டங்களையும் முன்னைவிட சிறப்பாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

   காவல் துறைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் காரணமாக, தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். இதில் உங்கள் அனைவரின் பங்கும் உள்ளது. அதற்காக உங்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

   இங்கு பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிவகை செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

   மக்களைச் சென்றடைய வேண்டிய திட்டங்கள், சரிவர அவர்களை சென்று அடைவதை உறுதி செய்வது, களப் பணியாளர்கள் என்ற அளவில் களப் பணியாளர்கள் ஆகிய உங்களது தலையாய கடமையாகும். ஏனென்றால், ஜனநாயகத்தில் மக்கள்தான் எல்லாமுமே. அவர்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை, அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

   அரசின் பல்வேறு நலத்திட்டங்களை திறம்பட செயலாற்றியமைக்காக விருதுபெற உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டில் நீங்கள் முன் வைத்த கோரிக்கைகளை பொறுத்தவரையில், தேவையானவற்றை செய்து கொடுக்க இந்த அரசு தயாராக உள்ளது. அந்த வகையில், இம்மாநாட்டில் நீங்கள் வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர், கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

   அரியலூர் மாவட்டம்

   1. ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு கூடுதல் கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும்.

   பெரம்பலூர் மாவட்டம்

   2. சின்னமுட்லூர் பகுதியில் தடுப்பணைக்குப் பதிலாக நீர்த்தேக்கம் அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

   3. வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள பகுதிகளுக்கு வெள்ளாற்றிலிருந்து ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

   தஞ்சாவூர் மாவட்டம்

   4. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலத்தையும் அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் பகுதியையும் இணைக்கும் வண்ணம் கொள்ளிடம் ஆற்றில் 56 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும். இப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

   நாகப்பட்டினம் மாவட்டம்

   5. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கூடுதல் நீரேற்று நிலையம் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

   6. நாகப்பட்டினம் ஆயுதப்படை வளாகத்தில் ஊர்க்காவல் படை பிரிவிற்கு 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும்.
   7. வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.

   கடலூர் மாவட்டம்

   8. ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கதவணை கட்டும் பணிக்கான நில எடுப்புப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
   9. கடலூர், கம்பியம்பேட்டை - செம்மண்டலம் சாலையில் ரயில்வே கடவு எண் 157-இல் ரயில்வே மேம்பாலப் பணியை மேற்கொள்ள ஏதுவாக,
   ஜவான்ஸ்பவன் சாலை 2 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றுப் பாதையாக பயன்படுத்தப்படும்.

   ராமநாதபுரம் மாவட்டம்

   10. கீழக்கரை, வாலிநோக்கம், நயினார்கோயில் மற்றும் பேரையூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் புதிய காவல் நிலைய
   கட்டடங்கள் கட்டப்படும்.

   11. முதுகுளத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம் 61 லட்சம் ரூபாய் செலவில் கட்டித்
   தரப்படும்.

   தருமபுரி மாவட்டம்

   12. பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் வழங்கப்படும்.

   கிருஷ்ணகிரி மாவட்டம்

   13. கேஆர்பி அணையின் பழுதான ஷட்டர்கள் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.

   வேலூர் மாவட்டம்

   14. காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளில் உள்ள தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும்.

   விருதுநகர் மாவட்டம்

   15. விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவிற்கு 1.10 கோடி ரூபாய் செலவில் மருத்துவ
   உபகரணங்கள் வழங்கப்பட்டு தரம் உயர்த்தப்படும்.

   16. சிவகாசி காவலர் மருந்தக கட்டடம் 77 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.

   புதுக்கோட்டை மாவட்டம்

   17. புதுக்கோட்டையில் நூறு காவலர்கள் தங்குவதற்கான துயிற்கூடம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

   திருவாரூர் மாவட்டம்

   18. நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், திருவாரூர் மற்றும் கொரடாச்சேரி ஆகிய பகுதிகளுக்கு கும்பகோணம் அருகில் உள்ள
   கருகூர் மற்றும் கடம்பகுடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

   19. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் மா.நெ.எண் 202, திருவாரூர் - மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலை கி.மீ. 13/0 - கி.மீ.17/0 -
   இல் முடியும் சுமார் 5.6 கி.மீ. நீளத்திற்கு 53 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

   20.திருவாரூர் மாவட்டத்தில் புதிய கிராம சுகாதார செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆரம்பிக்கப்படும்.

   21. மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு 20 லட்சம் ரூபாய் செலவில் குருதி சேமிப்பு வங்கி அமைக்கப்படும்.

   22.திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 38 லட்சம் ரூபாய் செலவில் அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும்.

   திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    
    
    
   English summary
   Today the 3 days conference of IAS/ IPS officers ends. CM Edappadi Palanisamy announces 84 projects for TN.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more