அட ஆமால்ல.. கவனிக்க வைத்த எடப்பாடியின் “நச்” பாயிண்ட்கள்.. பிரச்சாரத்தில் இதை நோட் பண்ணீங்களா
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அனைத்து கட்சிகளாலும் தொடங்கி பிரச்சாரக் களங்கள் சூடு பிடித்துள்ளது. பிரச்சாரங்களின் மூலமாக தங்களின் கருத்தை ஒவ்வொரு கட்சிகளும் மக்களிடம் எப்படியாவது கொண்டு சேர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுகவின் பிரச்சாரக் கூட்டங்கள் அளவில் பெரிதாகவும் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகள் மக்களை விழிப்படைய செய்யவும் வைத்திருக்கிறது.

ஒவ்வொரு தொகுதிகளிலும் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி முன் வைக்கும் கருத்துக்கள் மக்கள் மறந்து பல பிரச்சினைகளை நினைவுக்கூறியுள்ளது. விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டணம் தொடங்கி வரி உயர்வு வரை அனைத்தையும் அவர் குறிப்பிட்டு பேசுவது மக்களுக்கு ஒரு தெளிவை தந்துள்ளது.
மேலும் அதிமுக காலத்தில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக், மடிக்கணினி திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் முடக்கப்பட்டது ஏன்? என்றும் அதனால் எளிய மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் புரிந்துக்கொண்டு வருகின்றனர்.
உச்சக்கட்டமாக "அம்பானிக்கும் ஒரு ஓட்டுதான், ஏழை மக்களுக்கும் ஒரு ஓட்டு தான்" அம்பானி, அதானிகளுக்கு மானியங்கள் தரும் பொழுது, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு மாதம் 3000 தர முடியாதா? போன்ற கேள்விகள் மக்களை யோசிக்க வைத்துள்ளது.
இதுப்போக தேர்தலுக்கு முன் திமுக கொடுத்த 526 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டது என்றும் குறிப்பாக நீட் தேர்வு ஒரே கையெழுத்தில் ரத்து செய்யப்படும் போன்ற திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது ஏன்? என்றும் பிரச்சாரக் கூட்டங்களில் கர்ஜித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
காவிரி நதிநீர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சனை, பாலாறு தடுப்பணை மற்றும் மேகதாது பிரச்சினை என முக்கியமான பிரச்சினைகளை தொடர்ந்து தன் பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி எடுத்துரைக்கும் கருத்துக்கள் மக்களுக்கு "அட ஆமால்ல" என்ற எண்ணம் தோன்றி மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications