வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!
முதலமைச்சர் விஜய், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருந்தார். ஆனால், பிரதமர் உடனான தமிழக முதல்வர்களின் சந்திப்பில் இதுவே குறைந்த நேரம் என்று சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி சந்தித்த விஜய் வெறும் 20 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டார். ஆனால், மோடியுடனான சந்திப்பு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாக சொல்லப்படுகிறது.

என்ன நடந்தது?
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலம் இல்லை. எனவே காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு கொடுத்தன. இது பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே கர்நாடகா, தெலங்கானா, கேரளாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கிறது.
இப்பபடி இருக்கையில், தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் தவெகவுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்திருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அங்கு மோடியை சந்தித்த அவர் தமிழ்நாட்டின் சார்பாக 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். இப்படி இருக்கையில் இந்த சந்திப்பு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, பிரதமர் மோடியை விஜய் சந்திக்க 4.27க்கு விஜய் உள்ளே சென்றார். வெளியில் 20 நிமிடங்களில் வந்துவிட்டார். இதற்கிடையில் பிரதமர் மோடியை வெறும் 10 நிமிடங்கள்தான் சந்தித்திருக்கிறார்.
தமிழக முதல்வர்களில், பிரதமரை சந்தித்த முதல்வர்களில் விஜய்தான் குறைவான நேரம் மட்டுமே சந்தித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications