ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்?
வாஷிங்டன்: ஈரானுடன் அமெரிக்கா நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ரெடியாகியிருக்கிறது. இதற்காக 14 பாயிண்ட்கள் அடங்கிய ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திடுவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் சர்வதேச கச்சா எண்ணெய் சப்ளை பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் இந்தியா உட்பட சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருக்கிறது. எனவே இந்த போர் எப்போது முடியும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படி இருக்கையில்தான் 14 பாயிண்ட்களை அமெரிக்கா முன்வைத்திருக்கிறது.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் டிரம்ப் பதிவிட்டிருக்கிறார். அதில், ஈரானுடன் எட்டப்பட்டுள்ள புதிய அமைதி உடன்படிக்கையின் மிக முக்கியமான 14 அம்சக் கொள்கைகளின் வரைவு விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
1. ஈரான் தங்களிடம் ஒருபோதும் அணு ஆயுதமோ அல்லது அணுகுண்டோ இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
2. சுங்கக் கட்டணமில்லா கப்பல் போக்குவரத்து: ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக இருவழிப் போக்குவரத்துக்கும் எவ்வித சுங்கக் கட்டணமும் இன்றி முழுமையாகத் திறந்துவிடப்பட வேண்டும்.
3. கடலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கடல்சார் கண்ணிவெடிகளையும் (Water Mines) ஈரான் உடனடியாக அகற்ற வேண்டும். ஏற்கனவே அமெரிக்காவின் அதிநவீன அண்டர்வாட்டர் மைன் ஸ்வீப்பர்கள் மூலம் பல கண்ணிவெடிகள் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பவற்றையும் ஈரான் 30 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.
4. கடந்த சில மாதங்களாக ஈரானியத் துறைமுகங்களைச் சுற்றி வளைத்திருந்த அமெரிக்கக் கடற்படையின் வரலாறு காணாத முற்றுகை இனி தளர்த்தப்படும். இதனால் அங்குச் சிக்கியிருந்த வணிகக் கப்பல்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பலாம்.
5. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பவர்புல் B2 பாம்பர் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலால், ஈரானின் நிலத்தடி மலைப் பகுதிகளுக்குள் புதைந்துபோன அணுசக்திப் பொருட்கள் தோண்டி எடுக்கப்படும். உலகிலேயே இதைச் செய்யும் இயந்திரத் திறன் கொண்ட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள், சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து ஈரானில் உள்ள அந்த அணுசக்தித் துகள்களை முழுமையாக அழிக்கும்.
5. அடுத்த அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு எவ்விதப் பணப் பரிவர்த்தனையோ அல்லது நிதி விடுவிப்போ செய்யப்படாது.












Click it and Unblock the Notifications