குமரியீல் கடலரிப்பு தடுப்புப் பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்படும்- முதல்வர்

தமிழகம் முழுவதும் 84 திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி மாவட்டம்

64. கன்னியாகுமரி மாவட்ட கடலோரங்களில் ஏற்படும் கடலரிப்பு தடுப்புப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கோள்ளப்படும்.

65.மேலும் அவசரகால பணியாக வல்லவிளை துறையில் கடல் அரிப்பைத் தடுக்க 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடலரிப்புத் தடுப்புச் சுவர் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 Edappadi Palanisamy speech about police station death

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

66.திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

67.திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிசு அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். இனாம்குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்
மற்றும் 8 காவலர்களுக்கு ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

68. இனாம்குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
69. ஜீயபுரம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு 61 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம் கட்டித் தரப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம்

70. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் இரும்பேடு கிராமத்தில், கமண்டல நாக நதியின் குறுக்கே புதுப்பாடியில் உயர்மட்டப் பாலம்
கட்டப்படும். இப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

71. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் புதுப்பாடி - இலுப்பை - வடஇலுப்பை - பெரும்பாக்கம் - விஷார் - காஞ்சிபுரம் மாநில
நெடுஞ்சாலை சாலை 116ஏ கிலோ மீட்டர் 24/8ல் 31 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர் மட்டப் பாலம் அமைக்கப்படும். முதற்கட்டமாக இப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

72. திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிறுநீரக சிகிச்சைப் பிரிவிற்கான டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்படும்.

73. செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில், அவசர விபத்து சிகிச்சை பிரிவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

விழுப்புரம் மாவட்டம்

74. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லக்கூடிய 26 கிமீ நீளமுள்ள 4 நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி 18 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் 2018-19 மற்றும் 2019-20ல் CRIDP திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

75. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் புற்று நோய் சிகிச்சைக்குத் தேவையான வசதியை ஏற்படுத்த சுமார் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோபால்ட் உயர்ரக கதிரியக்க சிகிச்சை கருவியும் அதன் உபகரணங்களும் வழங்கப்படும்.

76. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு மேம்படுத்தப்படும்.

77. உளுந்தூர்பேட்டை பகுதியில் நிகழும் சாலை விபத்துகளைத் தடுக்க 83 லட்சம் ரூபாய் செலவில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படும்.

78. கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு 79 லட்சம் ரூபாய் செலவில் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டித் தரப்படும்.

சென்னை மாவட்டம்

79. சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகளுக்காக புதுப்பேட்டை மற்றும் புனித தோமையார் மலை ஆகிய
இடங்களில் விளையாட்டு பள்ளிகளுடன் கூடிய குழந்தைகள் காப்பகம் தலா 75 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

80.டி-7 அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு, அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடம் மற்றும் அம்மா நினைவிடத்திற்கு அருகில் 75
லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.

81. சென்னை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தலைமையகத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு நவீன கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.

82. தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA) மூலமாக ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் சூரிய
மின்சக்தி திட்டம் அமைக்கப்படும்.

83. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது‟ என்ற ஒளவையாரின் வாக்கின்படி, அரிய மனித உயிர்களை விபத்திலிருந்து காக்கும் உன்னதமான சேவையில் அதிக ஈடுபாட்டோடு செயல்படும் முதல் மூன்று மாவட்டங்கள் மற்றும் ஒரு மாநகரத்திற்கு ஆண்டுதோறும் "தமிழ்நாடு முதலமைச்சரின் விபத்து குறைப்பிற்கான சிறந்த மாவட்டம் மற்றும் சிறந்த நகரத்திற்கான விருது" வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

84.காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் மூன்று காவல் நிலையங்களைத் தேர்ந்தெடுத்து "தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பை" வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்புகள் உங்களுக்கு மன நிறைவையும், தமிழ்நாட்டு மக்களுக்கு நற்பயன்களையும் அளிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இதுவரையில் நீங்கள் செய்த சிறப்பான பணிகளை பாராட்டும் அதே வேளையில், வரும் ஆண்டில் உங்கள் பணி மேலும் சிறக்கவேண்டும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+