Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமலையில் முதல்வர் எடப்பாடியார் குடும்பத்துடன் முகாம்- நாளை காலை சுவாமி தரிசனம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் இன்று திருப்பதி புறப்பட்டு செல்கிறார்.

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசிக்க இன்று திருமலை சென்றார்.

திருமலை-திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் கோலாகலமாக 10 நாட்கள் நடந்த பிரம்மோற்சவம் விழா நேற்று நிறைவு பெற்றது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் இன்று பிற்பகல் சாலை வழியாக புறப்பட்டார்.

குடும்பத்துடன் திருப்பதி பயணம்

குடும்பத்துடன் திருப்பதி பயணம்

முதல்வருடன் அவரது மனைவி பி.ராதா, மகன் பி.மிதுன் மற்றும் ஜெ.சரண், உறவினர்கள் மாணிக்கம், எம்.சுசீலா மற்றும் முதல்வரின் உதவியாளர் எஸ்.கிரிதரன், பாதுகாப்பு அதிகாரி தர்மராஜ், பாதுகாவலர் என்.எஸ்.ரெட்டி, உள்ளிட்ட 11 பேர் செல்கின்றனர்.

விஐபி பிரேக் தரிசனம்

விஐபி பிரேக் தரிசனம்

திருமலைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆந்திரா காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். இவர்கள் இன்று இரவு திருமலையில் உள்ள முக்கிய விருந்தினர் தங்கும் மாளிகையில் தங்குகின்றனர். செவ்வாய்கிழமை காலை 6.30 மணிக்கு அஷ்டதளபாத பத்ம ஆராதனையில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை பகலில் திருமலையில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.

மே மாதம் சென்ற எடப்பாடியார்

மே மாதம் சென்ற எடப்பாடியார்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மே மாதம் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதிகாலை 5 மணியளவில் தனது மனைவி ராதா மகன் மிதுனுடன் வி.ஐ.பி. தரிசனத்தில் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு திருப்பதி ஏழுமலையான் படங்கள், தமிழ் பஞ்சாங்கம், லட்டு பிரசாதம் மற்றும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

சிக்கல் நீங்கியதில் மகிழ்ச்சி

சிக்கல் நீங்கியதில் மகிழ்ச்சி

மே மாதம் கட்சி பிளவுபட்டிருந்தது. ஆட்சியில் சிக்கல்களும் அதிகமாக இருந்தது. இப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து விட்டன. கட்சியிலும், ஆட்சியிலும் இருந்த சிக்கல் நீங்கிவிட்டதாக கருதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+